ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. படத்தின் கதாநாயகியர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.
ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'சித்திரம் பேசுதடி' நரேன் இணைந்துள்ளார். இது குறித்து நரேன், “ஒரு ரசிகனின் கனவு நனவாகிறது. நான் நடிகராக யார் உத்வேகமாக இருந்தாரோ அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். இயக்குனர் லோகேஷ், ராஜ் கமல் பிலிம்ஸ் ஆகியோருக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நரேன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.