பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அருண் விஜய் நடித்து வரும் புது படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தனுஷ் கோடியில் பரபரப்பான சண்டை காட்சி படமாக்கப்பட்டிருந்தது. மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் திடீரென அருண் விஜய் நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
நான் இங்கே சாப்பிடுகிறேன்.. என்ன இருக்கிறது என்று கேட்க சூடா மீன் குழம்பு, மீன் வறுவல் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அவருடன் இன்னும் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர். சுட சுட மீன் அருமையான சுவையுடன் இருந்ததினால், தனது டயட்டையும் மீறி நன்றாக சாப்பிட்டார். அந்த கடை நடத்தும் அம்மாவும் அவரை நன்றாக அம்மாவை போல் கவனித்து பறிமார.. அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. கண் கலங்க வைத்தது. சாப்பிட்டு விட்டு போகும் போது அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதை இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில், “ரோட்டுக் கடையில் உணவருந்திய போது.. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று பதிவிட்டுள்ளார்.