ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழகத்தில் நாளை (ஆக.,23) முதல் தியேட்டர்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதார கட்டுப்பாடுகளுடன், 50 சதவீத இருக்கைகள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை திங்கள் முதல் தியேட்டர்களைத் திறந்து கொள்ள அனுமதி என்பது நேற்று (சனிக்கிழமை) மாலைதான் அறிவிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் அனைத்துத் தியேட்டர்களையும் சுத்தப்படுத்தி திறப்பார்களா என்பது சந்தேகம்தான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தியேட்டர்கள் திறக்கப்படும். மேலும், நாளை முதல் தியேட்டர்களில் திரையிட எந்த புது தமிழ்ப் படங்களும் அவர்கள் கைவசம் இல்லை. வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் புதிய படங்களை அதிகமாக வெளியிடுவார்கள். அந்த விதத்தில் வரும் வெள்ளி ஆகஸ்ட் 27ம் தேதியன்று சில புதிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று தியேட்டர்கள் திறப்பு பற்றிய அறிவிப்பு வந்ததுமே 'பிளான் பண்ணி பண்ணணும்' படக்குழுவினர் 'பிளான் பண்ணி தியேட்டருக்கு வர நாங்க ரெடி, நீங்க ரெடியா' என போஸ்டரை வெளியிட்டனர். விஜய் ஆண்டனி நடிக்கும் 'கோடியில் ஒருவன்' படக்குழுவினர் விரைவில் திரையரங்குகளில் என்ற போஸ்டர் வெளியிட்டனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், சசிகுமார், அருண் விஜய் ஆகியோர் நடித்து இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.
சிம்பு நடிக்கும் 'மாநாடு', ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3', விஷால், ஆர்யா நடிக்கும் 'எனிமி', விஷ்ணு விஷால் நடிக்கும் 'எப்ஐஆர்', கங்கனா ரணவத் நடித்துள்ள 'தலைவி' ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக இருக்கின்றன. இன்னும் பல படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. சில படங்கள் சென்சார் முடிந்தும், சில படங்கள் சென்சார் வாங்குவதற்காகவும் இருக்கின்றன. பல படங்கள் கடைசி கட்டப் பணிகளில் உள்ளன. அந்த வகையில் சுமார் 100 படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டிற்காகத் தயாராக உள்ளன.
50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. அதே சமயம் பல மீடியம் நடிகர்களின் படங்கள் அதிகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது தெரிந்துவிடும். ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' தீபாவளிக்கு வெளிவர உள்ளதால் அதற்குள் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதனால், அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் வெளியீடும் அப்போதுதான் இருக்கும் என்கிறார்கள்.
2021ம் வருடம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளன, அதில் 18 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஒரு வெள்ளிக்கிழமைக்கு சராசரியாக 4 படங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் இந்த வருடத்திற்குள்ளாக மேலும் 72 படங்கள் வெளியாக மட்டுமே வாய்ப்புள்ளது. ஓடிடி தளங்களில் மேற்கொண்டு 20 படங்கள் வரை வெளிவந்தால் அதுவே பெரிய விஷயம்தான்.