எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
உலக அளவில் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை மார்வெல் ஸ்டுடியோசின் 'அவஞ்சர்ஸ்' சீரிஸ் படங்கள். சூப்பர் ஹீரோக்களை உள்ளடக்கிய 'அவஞ்சர்ஸ்' குழுவில் 'பிளாக் விடோ' என்ற கதாபாத்திரமும் முக்கியமான ஒரு சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரம்.
'அவஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களில் 'தி அவஞ்சர்ஸ் (2012), 'தி அவஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான் (2015), 'அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் (2018), 'அவஞ்சர்ஸ் - என்ட்கேம்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. நான்கு 'அவஞ்சர்ஸ்' படங்களிலும் இடம் பெற்ற கதாபாத்திரம் 'பிளாக் விடோ'.
'அவஞ்சர்ஸ்' குழுவில் இருக்கும் 6 முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனித் தனியாக அவர்களைப் பற்றிய தனித் திரைப்படங்கள் ஏற்கெனெவே வெளிவந்துள்ளன. அவர்களில் 'ஹாக் ஐ' கதாபாத்திரத்திற்கு மட்டும் திரைப்படம் வரவில்லை, ஆனாலும், வெப் சீரிஸ் விரைவில் வெளிவர உள்ளது.
'பிளாக் விடோ' கதாபாத்திரத்திற்கான தனித் திரைப்படமான 'பிளாக் விடோ' லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மெல்போர்ன், நியூயார்க் ஆகிய ஊர்களில் பிரீமியர் காட்சியாக மட்டும் திரையிடப்பட்டது. உலக அளவிலும், அமெரிக்காவிலும் ஜுலை 9ம் தேதி தியேட்டர்களிலும், சில குறிப்பிட்ட நாடுகளில் ஓடிடி தளங்களிலும் ஒரே நாளில் வெளியானது.
இப்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தியேட்டர்கள் வெளியீட்டைத் தவிர்த்து, ஓடிடி தளங்களில் படத்தை செப்டம்பர் 3ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இந்தியாவில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஓடிடி வெளியீட்டிற்காக இந்த மொழிகளில் டிரைலர்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிவிப்பு 'அவஞ்சர்ஸ்' பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.