2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலு சில போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றன.
படத்துக்கு ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி அது. கொரோனா பெருந்தொற்றால் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட தடை காரணமாக அதனை இன்னும் படமாக்காமல் இருந்தனர். தற்போது வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் குறிப்பிட்ட காட்சியை ரஷ்யாவில் படமாக தீர்மானித்து வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். இன்று அஜித்தும் ரஷ்யா கிளம்பிச் செல்கிறார்.
முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்குவதால் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ரஷ்யா கிளம்பிச் சென்றுள்ளார். அங்கு அஜித் இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆக்ஷன் காட்சியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும். உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி தீபாவளிக்கு படத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வரும் நிலையில் வலிமை அதனுடன் மோதவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.