ஷில்பா ஷெட்டியின் கணவர் போட்ட மானநஷ்ட ஈடு வழக்கு! | தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் ஜாலி டூர் சென்ற திரிஷா! | கஜினி- 2 படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!! | வசூலைக் வாரி குவித்த லப்பர் பந்து | விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடமால் பாடிய அனிரூத் | 69வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்! | 108 விஷ்ணு கோவில்களில் படமாகும் 'நாகபந்தம்' | பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செல்லும் போது இயக்குனர் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'உர்ச்சா' படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நேற்று பிரகாஷ்ராஜ் கொடுத்திருந்தார்.
இன்றைய அப்டேட்டாக குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் த்ரிஷா கொடுத்திருக்கிறார். உர்ச்சாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்புப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதோடு, அங்கே தெருவோரக் கடைகளிலும் ஷாப்பிங் சென்றிருப்பார் போலிருக்கிறது. அந்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடைசிக் கட்டப் படப்பிடிப்பை 'பொன்னியின் செல்வன்' படக்குழு விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.