அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பலரது கண்டனத்திற்கு ஆளாகி வந்தார். சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர். முன்னதாக கைதாகும் போது கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் போலீசார் தன் மீது கை வைத்தால் கத்தியை எடுத்து என்னை நானே குத்திக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டலும் விடுத்தார்.
சென்னை அழைத்துவரப்பட்ட மீரா மிதுனை, சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீராமிதுனை வருகிற 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து மீரா மிதுன் பேசியிருந்த வீடியோவில் உடனிருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் மீராமிதுன் ஏதேதோ பேசுவதாகவும், கமிஷனரை வரச்சொல்லி மீராமிதுன் அடம்பிடிப்பதாகவும் போலீசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.