மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் |
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. அப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்கிறார்கள். மோகன்ராஜா படத்தை இயக்க தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஆக.,13) முதல் ஆரம்பமாவதாக இசையமைப்பாளர் தமன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
“வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். சிரஞ்சீவியின் 153வது படத்திற்கு ஒரு பாடலை நிறைவு செய்துள்ளோம். சிரஞ்சீவி சார் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பெரிய ரசிகனாக எனக்கு இது மிக சிறப்பான ஒன்று. நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. எங்கள் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு வாழ்த்துகள்” என அப்டேட் கொடுத்துள்ளார்.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்குப் பிறகு தமன் தெலுங்கில் மிகவும் பிஸியாகிவிட்டார். பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகான்டா', நானி நடிக்கும் 'டக் ஜகதீஷ்', வருண் தேஜ் நடிக்கும் 'கானி', மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', பவன் கல்யாண், ராணா நடிக்கும் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக், ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்திற்கு முதல் முறையாக இப்போது தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.