அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டான பாடலாக அமைந்தது. குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற 'கண்ணான கண்ணே...' பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்து பலரையும் இன்று வரை நெகிழ வைத்து வருகிறது. அதன் லிரிக் வீடியோ ஏற்கெனவே யு டியுப் தளத்தில் 100 மில்லியன்களைக் கடந்து தற்போது 148 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்போது அந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'அடிச்சி தூக்கு...' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நேற்று அப்படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்தநாளில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் யு டியுபில் இரண்டரை வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்போது 100 மில்லியனைக் கடந்துள்ளது.
இதுவரையிலும் 24 தமிழ் சினிமா பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளன. 25வது பாடலாக இந்த 'அடிச்சி தூக்கு' பாடல் சாதனை புரிந்துள்ளது.
அஜித் படப் பாடல்களில் இதுவரை 2 பாடல்கள் மட்டுமே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. இரண்டுமே 'விஸ்வாசம்' படப் பாடல்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.