Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாராளமாக கைது செய்யுங்கள்... காந்தி, நேரு சிறை செல்லவில்லையா - மீரா மிதுன்

12 ஆக, 2021 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Arrest-me,-Gandhi,-Nehru-went-to-prision-says-Meera-mithun

சர்ச்சைகளை பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை மீரா மிதுன். சமீபத்தில் பட்டியல் இன மக்களைப்பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். ‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி தான் குறிப்பிட்டு பேசினேன். என்னை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகவில்லையா... என்னை கைது செய்ய முடியாது. அப்படி ஒரு சூழல் எனக்கு வராது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். இதற்காகத்தானே 5 வருடங்களாக முயற்சி செய்து வருகிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் தமிழ் பேசும் ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இங்கு வேற்று மொழி பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைய முடியும். காரணம் அவர்கள் இவர்களின் ஆசைக்கு இணங்குகிறார்கள். அதோடு என் மீது அனைவருமே ஆசைப்படுவது தான் எனது இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு தமிழ் பெண்ணை யாருமே இங்கே வெற்றியடைய விடமாட்டார்கள். ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்று அந்த வீடியோவில் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் மீராமிதுன்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகி பாபுபீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ... என் வாழ்வில் கிடைத்த அதிர்ஷ்டம் : மனைவிக்கு ஆர்யா பிறந்தநாள் வாழ்த்து என் வாழ்வில் கிடைத்த அதிர்ஷ்டம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
13 ஆக, 2021 - 10:03 Report Abuse
rajan_subramanian manian இவள் ஏன் காந்தி பற்றி பேசக்கூடாது? ஒண்ணுக்கும் உதவாத காங்கிரஸ், உலக்கை நாயகன் எல்லோரும் காந்தி பற்றி பேசி நம்மை கடுப்பேற்றும் சமயம் இவளும் பேசட்டும். நிற்க பட்டியலினத்தவர் பற்றி திமுக பேசியதை விட இது ஒன்றும் மோசமில்லை.
Rate this:
Manian - Chennai,ஈரான்
13 ஆக, 2021 - 06:49 Report Abuse
Manian என்னம்மா ரோசா, இந்தப் பொண்ணுக்கு நம்ம தெறமை பத்தி தெரியாது போல இன்சுபெக்டரு ஐயா, கா்தி, நேரு இவளுக்கு சொதந்திரம் வாங்க செயிலுக்கு போனாக. இப்ப ஒங்க கையுயிலே சின்ன வூடானப் புறம் அப்படி எல்லாம் பேசாதுங்க ஒங்க ராசி அப்படிங்க.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஆக, 2021 - 04:19 Report Abuse
meenakshisundaram அப்படி போடு அருவாளை ஏதேது .உதவானிதி ,கனி மொழி .மிசா ஸ்டாலின் ன்னு எல்லோரையும் மிஞ்சின ஸ்டேட் மென்ட் ?
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
13 ஆக, 2021 - 04:10 Report Abuse
RaajaRaja Cholan திட்டம் இரண்டு படத்தில் கதாநாயகனாக நடிக்க அணைத்து தகுதியும் உடையவர்
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
13 ஆக, 2021 - 00:07 Report Abuse
Vena Suna பாவம் பாப்பா Bigg Boss சிறைனு நினைச்சிக்கிச்சு...பாவம்
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in