‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
செல்வராகவன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். அப்படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அதன் பிறகு படம் டிவியில் ஒளிபரப்பான போதும், பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
2011ம் ஆண்டிலேயே “ஆயிரத்தில் ஒருவன் ஸ்கிரிப்ட் ரெடி. கடைசி இரண்டு நாட்களாக அதை இன்னும் சரியாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உருவாகும் என நம்புகிறேன்,” என டுவீட் செய்தார். அதன்பின் அந்தப் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வரும், அதன்பின் அப்படியே அமுங்கிப் போகும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் “இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த, என் அன்பு உள்ளங்களுக்கு, இதோ உங்கள் முன்னால், ஆயிரத்தில் ஒருவன் 2 2024ல் உருவாகும் என டுவிட்டர் வழியே அறிவித்தார் செல்வராகவன்.
இதனிடையே, ஒரு நாளிதழில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பட்ஜெட் காரணங்களால் காலவரையின்றி நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதற்கு இயக்குனர் செல்வராகவன், “எப்போது அந்த மர்மமான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்தது என்பதை சகல மரியாதையுடன் செல்ல முடியுமா?. அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்?, தயவு செய்து உங்களது ஆதாரங்களிடம் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.