'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

ராஜமவுலி இயக்கத்தில் சுதந்திர கால சரித்திரப்படமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக ஆலியா பட், ஜுனியர் என்டிஆர் ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' பட செய்திகளில் ஒலிவியா மோரிஸ் பற்றிய தகவல்கள் அதிகம் வருவதில்லை. கடந்த ஜனவரி மாதம் படத்தில் ஒலிவியா பற்றிய முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. படத்தில் அவர் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதற்குப் பிறகு படம் பற்றிய பல செய்திகள், தகவல்கள் வெளிவந்தாலும் ஒலிவியா மோரிஸ் பற்றி அப்டேட்கள் வெளியாகவேயில்லை. தற்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் ஒலிவியாவும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஓ... மீண்டும் வந்துள்ளது சிறப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிவியா பற்றிய தகவல்கள் கூகுளில் கூட அதிகம் கிடைக்கவில்லை. 2018ல் வந்த டிவி தொடரான ' 7 டிரைல்ஸ் இன் 7 டேய்ஸ்' ல் மட்டும் நடித்த தகவல்தான் இருக்கிறது. அதில் கூட அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. 23 வயதான ஒலிவியா நாடகம் மற்றும் நடிப்பில் பட்டம் வாங்கியவர். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு பிரபலமாகிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.