இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு கூட்டணி முதன்முதலில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இணைந்தனர். அந்தபடம் வெற்றி பெற தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்தனர். இந்தபடமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ளனர். இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிட்டு இருந்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சிம்புவின் 47வது படமாக உருவாகும் இப்படத்தின் புதிய தலைப்பு, பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்திற்கு வெந்து தணிந்தது காடு என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் சிம்பு பின்னாள் காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்க, அதிலிருந்து தப்பியது போன்று மிகவும் சின்ன பையனாக கையில் நீண்ட கம்பு உடன் லுங்கி சட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் சிம்பு. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் சிம்புவின் ரசிகர்கள் இதை சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.
பொதுவாக கவுதம் மேனன் படத்தில் வசனங்களில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும் அவரின் பட தலைப்புகள் தமிழில் தான் இருக்கும். அதேப்போன்று இந்த படத்திற்கும் வெந்து தணிந்தது காடு என தமிழிலேயே தலைப்பை சூட்டி உள்ளார்.