விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
2016ல் தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் மிஷ்கின். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நடத்தி வரும் மிஷ்கின் ஒரேயொரு பாடலை தவிர அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டார்.
இந்தநிலையில் கொரோனா பிரச்னையால் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்தபோதிலும், பிசாசு 2 படத்தை பொறுத்தவரை கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியிடப்படும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் அதிநவீன கருவிகளை வைத்து படப்படிப்பு நடந்து வருகிறதாம். அதனால் தியேட்டரில் பார்த்தால் படத்திற்கான எபெக்ட் சிறப்பாகவும், தரமாகவும் இருக்கும் என்கிறார் மிஷ்கின்.