''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரிவிலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது. வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டதாகவும் பாக்கி வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார். ஆனால் மனுவில் மனுதாரர் தான் யார் என்பதையும் தனது தொழிலையும் குறிப்பிடவில்லை. அவரது ஆண்டு வருமானமும் குறிப்பிடப்படவில்லை. ஏன் இதை மறைக்க வேண்டும்? பணியையோ தொழிலையோ குறிப்பிடுவது அவசியம் இல்லையா? ஏற்கனவே நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019ஆம் ஆண்டே தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நுழைவு வரியை செலுத்தாமல் இருக்க உள்நோக்கம் என்ன? வரி செலுத்தக்கூடாது என்று தானே? மக்களிடம் வசூலிக்கும் வரியில் போடப்பட்ட சாலையை தானே மனுதாரர் இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்துகிறார்? தன்னுடைய மோட்டார் சைக்கிளை வைத்து பால் வியாபாரம் செய்யும் பால்காரர் அந்த வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு ஜிஎஸ்டி வரி கட்டுகிறார். அவர் தன்னால் பெட்ரோலுக்கு வரி கட்ட முடியவில்லை என்று வழக்கு தொடர்வதில்லை. ஏழைகள் முறையாக வரி செலுத்துகிறார்கள். பணக்காரர்களும் பிரபலங்களும் தான் தங்கள் வரியை செலுத்துவதில்லை. விலக்கு கேட்கிறார்கள். மனுதாரர் தானே உணர்ந்து வரியை செலுத்தி இருக்கவேண்டும்.
நீங்கள் எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் அவற்றுக்கான வரியை செலுத்துங்கள். இந்த வழக்கை மதியம் 2.15 மணிக்கு தள்ளி வைக்கிறேன். தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் அதற்குள் மனுதாரர் கட்டவேண்டிய பாக்கி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும். மனுதாரர் அந்த தொகையை செலுத்த உத்தரவிடப்படும்.'. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதே நீதிபதி தான் சொகுசு காருக்கு நுழைவு வரி கேட்ட நடிகர் விஜய்யின் வழக்கில் விஜய்யை கடுமையாக விமர்சித்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.