விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு |

பிக்பாஸில் பங்கேற்ற தர்ஷன் - லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் முதல் போஸ்டரை சூர்யா வெளியிட்டார். இரட்டை இயக்குனர்கள் சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் இயக்குகின்றனர். தெனாலி படத்தை அடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், 20 ஆண்டுகளுக்கு பின் தயாரிக்கும் படம் இது. மேலும், முக்கிய பாத்திரத்திலும் நடிக்கிறார். யோகிபாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, 'பிளாக்' பாண்டி, 'பிராங்க் ஸ்டார்' ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை தமிழில் கூகுள் குட்டப்பனாக தமிழுக்கு ஏற்றபடி சில காட்சிகளை சேர்த்து உருவாக்கியுள்ளனர். ரோபோ ஒன்றும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.