''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கொரோனா தாக்கத்தின் அடுத்த மூன்றாவது அலை வருகிறதோ என்ற ஐயம் வரும் அளவிற்கு கடந்த சில நாட்களாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாளை முதல் ஒரு வார காலத்திற்கான ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட கோயில்களின் தரிசனத்திற்கான கட்டுப்பாடு, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் மக்கள் கூடும் வியாபார இடங்கள் ஆகியற்றிற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதனால், ஆகஸ்ட் 15 வாக்கில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த தியேட்டர்காரர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் நாளில் குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்கள் வந்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், நேற்று பல தியேட்டர்களில் சில காட்சிகளில் ஒருவர் கூட வரவில்லை என்பதால் காட்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.
அது பற்றி டோலிவுட்டில் விசாரித்த போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் ரசிகர்கள் வந்தார்கள். ஆனால், வெளியான அனைத்துமே சிறிய படங்கள். மேலும் அவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லாத காரணத்தால் நேற்று தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கோ அல்லது நன்றாக இருக்கிறது என்று சொல்லப்படும் படங்களுக்கோ தான் இனி மக்கள் வருவார்களோ என்ற அச்சத்தை அது ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை அடைந்துள்ளார்கள்.
ஓடிடி தளங்களில் வீட்டிலேயே நினைத்த ஓய்வு நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் வசதிக்கு மக்கள் பழகிவிட்டால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாகக் குறையும் என்றும் கலக்கமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் மூன்றாவது அலைக்கான முன்னோட்டமாக கடந்த சில நாட்களில் கொரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து சில பெரிய படங்களை வெளியிடக் காத்திருக்கும் திரையுலகினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேளை மூன்றாவது அலை வந்தாலும், வராமல் போனாலும் முன்னெச்சரிக்கை காரணமாக தியேட்டர்களை மேலும் சில மாதங்களுக்கு மூடும் சூழ்நிலை வரலாம் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.
அக்டோபர் மாதம் விஜயதசமி அன்றோ அல்லது நவம்பர் மாதம் தீபாவளிக்கோ தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.