இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகளும், பாடலும் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 2022 ஜனவரி14-ந்தேதி பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதோடு, இதே நாளில் தெலுங்கு சங்கராந்தியை முன்னிட்டு பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்து வரும் ராதே ஷ்யாம் படமும் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் பீஸ்ட் படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் நிலையில், பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம்,கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்திற்கும் இடையே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரிலீஸ் தேதிகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் இந்த மோதல் தவிர்க்கப்படும்.