சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமா உலகில் உள்ள இரண்டு முக்கிய கதாநாயகிகள் 'லிவிங் டு கெதர்' வாழ்க்கையில் இருக்கிறார்கள். ஒருவர் நயன்தாரா, மற்றொருவர் ஸ்ருதிஹாசன். தனது காதலி நயன்தாராவுடன் அவரது காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் பறப்பது, ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிடுவதுமாக இருக்கிறார். இந்த ஜோடி சென்னையில் வசிக்கிறது.
சென்னையைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் தனது காதலர் ஓவியர் சாந்தனு ஹசரிகா உடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருக்கிறார். இந்த காதல் ஜோடி அடிக்கடி தங்களது நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளில் சிக்குகிறார்கள்.
இப்போது தனது வயிற்றில் காதலர் சாந்தனு 'தக் லைப்' என்று அழகாக எழுதிய ஓவியத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து அதை டெலிட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இருப்பினும் சிலர் அதை டவுன்லோடு செய்துவிட்டு பகிர்ந்துவிட்டார்கள். வரைந்து பழக இடமா கிடைக்கவில்லை என ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.
'தக் லைப்' என்றால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்வது என்று அர்த்தம்.