ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்தப் படம் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்திலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது.
இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவி சுஹாசினி சில படப்பிடிப்புப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா டெக்னீஷியன்ஸ், உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் மலை பின்னணியில் சண்டைக்காட்சியை படமாக்குவது போலத் தெரிகிறது. ஒரு ரசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குனர் மணிரத்னத்தின் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றையும் அடுத்து வெளியிட்டார் சுஹாசினி.




