வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே சம்பள விவகாரத்தில் ஏதோ பிரச்சினை என்றும் அதனால் படத்தின் வேலைகளை நிறுத்தி விட்டதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினர்.
அதைப் பார்த்த வெங்கட் பிரபு உடனடியாக காட்டமாக பதிலளித்து டுவீட் போட்டுள்ளார். அதில், “யப்பா, சாமி... ஏன், ஏன், ஏன்.. தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். 'மாநாடு' படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்து தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.