ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
விஷால் எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து இருக்கிறார். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து வெளிவர இருக்கும் விஷால் படமும் இதுதான். தற்போது து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஷால் நடிக்கும் 32வது பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஷாலின் நண்பர்காளான நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். புதுமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இது பக்கா ஆக்ஷன் படம். இதில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 6 அடி உயரம் வரை உள்ளவர்கள் வில்லன் கேரக்டருக்கும், 16 முதல் 20 வயது வரை உள்ள இளம் பெண் கேரக்டருக்கும், 6 முதல் 7 வயதுள்ள சிறுவர்கள் குழந்தை நட்சத்திரத்திற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 91 89250 22988 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது ranacastingv32@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கோ புகைப்படம், வீடியோ உள்ளிட்டவைகளை 15.08.2021 தேதிக்குள் அனுப்பலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.