ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள நவரசா அந்தாலஜி படத்தில் பிரியதர்ஷன் இயக்கி உள்ள கதையில் ரம்யா நம்பீசன் முதன் முறையாக இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அவர் தயாரிப்பில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கேரக்டர் சிறுவயது முதல் கதையில் இடம்பெறுவதால் இயக்குனர் பிரிதர்ஷன் சார் சிறு வயது தோற்றத்திலும், முதிய தோற்றத்திலும் நீதான் நடிக்க வேண்டும். அது உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.
எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக் கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.