அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து, தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் அவரின் பிறந்தநாளின் போது இதற்கான அறிவிப்பு வெளியானது. அதோடு படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டனர். அதில் படத்தின் தலைப்போடு போஸ்டரில் மிக உக்கிரமான காளி படம் ஒன்றும் இடம் பெற்று இருந்தது. பிச்சைக்காரன் 2 படத்திற்கும் காளி போஸ்டருக்கும் என்ன சம்மந்தம் என அப்போது சமூகவலைதளங்களில் லேசான சலசலப்பு எழுந்தது. இந்நிலையில் இந்த போஸ்டருக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் M.சோலைகண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட போஸ்டரில் ஹிந்து மக்கள் போற்றி வணங்கும் காளி மாதாவின் திருவுருவ படத்துடன் பிச்சைக்காரன்-2 என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் மனதை காயப்படுத்தும் வகையிலும், எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்துமத கடவுளை இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இந்த போஸ்டரை வடிவமைக்கப் பட்டுள்ளது போல் தெரிய வருகிறது.
திரைப்படம் என்ற போர்வையில் தொடர்ந்து இந்து மதத்திற்க்கு எதிராக மட்டும் இந்து தெய்வங்களை அசிங்கப்படுத்தும் விதமாக இது போன்ற போஸ்டர்களை வெளியிடும் திரைப்படத்துறையினரை மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது.
இந்து கடவுள் படத்தை போட்டது போல் மற்ற மத கடவுளின் படத்தை போட்டு பிச்சைகாரன் 2 என்ற வார்த்தையை போட முடியுமா? அதற்கு உங்களுக்கு துணிவு இருக்கா? எதற்காக இந்துமத கடவுளை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற போஸ்டர்களை வெளியிட்டு யாரை குளிர வைக்க பார்க்கிறீர்கள்? பணம் சம்பாதிக்க வேண்டுமென்றாலோ, விளம்பரம் தேடி கொள்ள ஆசைபட்டாலோ எத்தனையோ தொழில்கள் இருக்கும் பொழுது திரைப்படம் என்ற பெயரில் ஏன் இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து தாக்கப்பார்கிறீர்கள்?
இந்த போஸ்டரால் நாங்கள் உள்பட இந்துமக்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒட்டுமொத்த ஹிந்து மக்களிடம் உடனடியாக பத்திரிகை, தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தகுந்த விளக்கமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்த போஸ்டரை உடனடியாக அகற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பாக விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் மீதும், தங்கள் மீதும் சட்ட ரீதியாக வழக்கு தொடுப்போம் என்றும், மிகப்பெரிய போராட்டை முன்னெடுத்து செல்வோம் என்றும், தங்கள் எடுத்த பிச்சைகாரன் 2 திரைப்படத்தை தென் மாவட்டத்தில் உள்ள இனி எந்த தியேட்டரிலும் ஓட விடமாட்டோம் என்றும் உறுதியாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.