பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அதர்வா நடித்த ஈட்டி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரவி அரசு. ஈட்டி படத்துக்கு இசையமைத்த ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, இயக்கி உள்ள படம் ஐங்கரன். மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அப்படியே முடங்கி கிடந்தது.
வெளிவராமல் இருக்கும் பல படங்கள் தற்போது ஓடிடியில் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐங்கரனும் ஓடிடியில் வெளிவரத் தயாராகிவிட்டது. இதற்காக படக் குழு சோனி லைவ் குழுவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.
இந்த படத்தில் காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ் அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நல்ல மதிப்பெண்களுடன் பொறியில் படித்த இளைஞனை இந்த சமூகம் மதிப்பதில்லை. அவனுக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதனை தன் பொறியியல் அறிவை கொண்டு எப்படி முறியடித்து தன் திறமையை உலகுக்கு காட்டுகிறான் என்பது மாதிரியான கதை.