ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக எவர்கிரீன் கூட்டணியாக வலம் வருபவர்கள் நடிகர் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும். இதுவரை தான் இயக்கியுள்ள 77 படங்களில் மோகன்லாலை வைத்து மட்டுமே சுமார் 28 படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். இப்போது இவர்கள் கூட்டணியில் மிகப்பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாக்கி இருக்கும் 'மரைக்கார்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்தநிலையில் அடுத்தததாக மீண்டும் மோகன்லாலை வைத்து கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவுள்ளார் பிரியதர்ஷன். குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் மோகன்லால் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக தற்போதே பயிற்சி மேற்கொள்ள துவங்கிவிட்ட மோகன்லால், தனது கதாபாத்திரத்திற்காக 15 கிலோ எடையையும் குறைக்க இருக்கிறாராம்.