பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
2018ம் ஆண்டு கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான ஆக்ஷன் படமாக இருந்ததால் இந்திய முழுவதும் படத்தைப் பற்றிப் பேசினார்கள். தற்போது உருவாகியுள்ள 'கேஜிஎப் 2' , இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பது அந்தப் படத்தின் முதல் டீசருக்குக் கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படத்தில் கொடூர வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “போர் என்பது முன்னேற்றத்திற்கான அர்த்தம், கழுகுகள் கூட எனக்கு உடன்படும் - ஆதீரா,” என அவருடைய கதாபாத்திரப் பெயர் மற்றும் வாசகங்களுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். போஸ்டரில் முரட்டு தோற்றத்தில் உள்ளார் சஞ்சய் தத்.
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீடு எப்போது என்று இன்றைய போஸ்டரில் குறிப்பிடவில்லை.