டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது கேரியரில் மெகா ஹிட்டாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி, நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட விஜய் ஆண்டனி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தில் சாத்னா டைட்டஸ் நாயகியாக நடித்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த நாயகி வேடத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் மஹா படத்தில் நடித்துள்ள ஹன்சிகா தற்போது தெலுங்கில் என் பெயர் ஸ்ருதி, 150 நிமிடங்கள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.