ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகாஆனந்த். 21 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்
இவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவனி(28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய யாஷிகாவும் உடன் பயணித்த 2 ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். யாஷிகாவுக்கு இடுப்பு, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வலது காலில் அறுவை சி்கிச்சை நடந்துள்ள நிலையில், போலீசார் விசாரணையில் விபத்து பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது, 'யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது. இதன் கூரையில் ஒரு கதவு இருக்கும். யாஷிகா மணிக்கு சுமார் 130 - 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார். அதேநேரம் காருக்குள் சத்தமாக பாடல்களை ஒலிக்க விட்டு 4 பேரும் கூச்சலிட்டபடி பயணித்துள்ளனர். இந்த நிலையில் தான், முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோழி வள்ளிசெட்டி பவானி, கூரையில் இருந்த திறப்பைத் திறந்து இருக்கையில் ஏறி நின்று ஆடியுள்ளார். பாடல்களுக்கு ஏற்ப அவர் நடனம் ஆடியபோது காற்றில் பறந்த அவரது ஆடை, யாஷிகாவின் முகத்தில் பட்டு கண்களை மறைத்ததால் விபத்து நடந்துள்ளது. பதற்றமடைந்த யாஷிகாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், முதலில் இடது பக்கம் சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்புகளில் மோதியுள்ளது.
சுதாரித்த யாஷிகா, விபத்தை தடுக்கும் முயற்சியாக காரை வலது பக்கம் திருப்பவே அதிவேகத்தில் சாலைத் தடுப்பில் மோதி பலமுறை கார் உருண்டுள்ளது. அதேநேரம் காரின் திறப்பில் வள்ளிசெட்டிபவனி நின்று கொண்டு வந்ததால் மோதிய வேகத்தில் அவர் காரை விட்டு வெளியே துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் நண்பர்கள் பல முறை கார் உருண்டும் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர். யாஷிகா சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்ததால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரின் முன்பக்கம் அதிக சேதாரத்திற்கு உள்ளாகாமல், பக்கங்கள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.