தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது சர்கார் படம். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அரசின் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "தணிக்கை முடிந்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது " என்று தீர்பளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.