பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதனுடன் படத்திற்கான பிரமோஷன் பாடல் ஒன்றையும் 5 மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழில் அப்பாடலை இளம் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாட உள்ளார். அதற்காக சென்னை வந்து அவரைச் சந்தித்து சில தினங்களுக்கு முன்பு அது பற்றி பேசியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் கீரவானி.
சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து அவருடன் உரையாடியது பற்றிய புகைப்படங்களை வெளியிட்ட கீரவானி, அன்று இரவே அனிருத்துடனான சந்திப்பு பற்றியும் டுவிட்டரில் பதிவிட்டார்.
“ஆர்ஆர்ஆர்' படத்திற்காக அனிருத்துடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. செயல்திறன், ஆற்றல், திறமை மற்றும் அவரது அற்புதமான குழுவினர் அவரது முக்கிய சொத்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பணிவானவர்” என அனிருத் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எதையும் அவர் வெளியிடவில்லை.




