ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அறிமுக நாயகி ஒருவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து, ரசிகர்களுக்கும் அவரை பிடித்துவிட்டால், ஓவர்நைட்டில் பெரிய ஆளாகி விடுவார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் தான் தெலுங்கு அறிமுக நடிகை கிரீத்தி ஷெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரீத்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'உப்பென்னா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து கதாநாயகி கிரீத்தி ஷெட்டியை தேடி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
இன்னொரு பக்கம் ஜீ தெலுங்கு சேனல் அவருக்கு மிகப்பெரிய பம்பர் பரிசு ஒன்றை அளித்து கவுரவித்துள்ளது.. ஆம்.. குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் ரீச் ஆனதால், ஜீ தெலுங்கு தொலைக்காட்சி தயாரிப்புகளின் விளம்பர தூதராக க்ரீத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளது.. இதற்காக அவருக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் டீல் பேசப்பட்டுள்ளதாம். இதற்கு முன்னதாக மகேஷ்பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த பொறுப்பை வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.