சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

அமித் பார்கவ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் அமித் பார்கவ். தற்போது இவர் ஜி தமிழில் திருமதி ஹிட்லர் சீரியலில் தடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனனவரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் தொப்பையுடன் இருந்த பார்கவ் கடினமாக உடற்பயிற்சி செய்து பிட் ஆகியுள்ளார்.
அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பார்கவ், " இரண்டு போட்டோக்களும் நடுவில் ஆறு மாத காலம் மட்டும் தான். கடந்த மூன்று மாதங்களாக நான் பிட் ஆக மாறுவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினேன். நான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. இருப்பினும் இந்த போட்டோக்கள் யாருக்காவது இன்ஸ்பரேஷன் ஆக இருக்கும் என வெளியிடுகிறேன். ரகசியம் எதுவும் இல்லை, விடாமல் முயற்சிப்பது தான் முக்கியம்" என கூறி உள்ளார்.




