என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ரஜினியின் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம், மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரிபாட்டா ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், லாக்டவுன் காலகட்டம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் செல்ல நாய்க்குட்டியுடன் கடற்கரையில் போட்டோ சூட் எடுத்து வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், அதையடுத்து ராமேஷ்வரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தவர், தற்போது நான்கு விதமான யோகாசனங்களை செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன.
அதோடு, நான்கு வெவ்வேறு ஆசனங்களும் ஒரு மில்லியன் எண்ணங்களும் ஒரே காலில் சில கணங்கள் மூடப்பட்டுள்ளன. சிறந்த ஆற்றல் மற்றும் போர் வீரரின் திறனை யோகா பயிற்சியில் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.