ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
ஆர்யா நடித்த 'டெடி, சார்பட்டா பரம்பரை' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாக்கி வருகிறார்கள் ஆர்யா, தற்போது நடித்து வரும் 'அரண்மனை 3, எனிமி' ஆகிய படக்குழுவினர்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'அரண்மனை 3' படம் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் படக்குழுவினர் மீடியாக்களுக்கு அனுப்பினர். அடுத்து ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளிவந்தாலும் சினிமா பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அரசியல், கட்சிகள், சாதி, கதைக்களம், நடிகர்கள் ஆகியவை குறித்து கடும் மோதலும், விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிலும் ஆர்யா பெயரும் இடம் பெறுவதால், இந்த சமயம் தங்களுக்கு சாதகமான காலம் என 'அரண்மனை 3, எனிமி' குழுவினர் முடிவு செய்து, தங்கள் படங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
'அரண்மனை 3, எனிமி' இரண்டு படங்களம் தியேட்டர்களில் வெளிவந்தாலும், ஓடிடியில் வெளிவந்தாலும் அதிக விலைக்கு வியாபாரம் பேசப்படும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு 'சார்பட்டா பரம்பரை' வரவேற்பே காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.