விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
தமிழ்த் திரையுலகின் சீனியர் கதாநாயகியும், பாஜகவின் முக்கிய உறுப்பினர் ஆகவும் உள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தான் இன்றைய சமூக வலைத்தள வட்டாரங்களில் முக்கிய பரபரப்பாக உள்ளது.
அதன்பின் குஷ்பு தரப்பிலிருந்து இந்த 'ஹேக்' குறித்து டுவிட்டர் தரப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது குஷ்புவின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட போது அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பழைய பதிவுகளும் தற்போது அந்த கணக்கில் காணப்படுகிறது.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவரது கணக்கு முதல் முறையாக ஹேக் செய்யப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கொரானோ முதல் அலை வந்த போது அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து பதிவிட்டு வந்தார். அந்த சமயத்தில் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்தார்கள். அதன்பின் அவரது கணக்கை மீட்டெடுத்தார்.
அவர் தற்போது பாஜகவில் இருக்கும் போதும் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளார்கள். அரசியல் மற்றும் சினிமா பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது சமூக வலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பாற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட டுவிட்டர் நிறுவனங்கள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.