ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தமிழில் 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்க தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த ஆண்டிற்கான தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருது, தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருத ஆகியவை கிடைத்தது.
அப்படத்தைத் தெலுங்கில் 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்தனர். தியேட்டர்களில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
படத்தைப் பார்த்தவர்கள் வெங்கடேஷின் நடிப்பையும், படத்தின் உருவாக்கத்தையும் பாராட்டி வருகிறார்கள். தமிழில் வெளியான ஒரு சிறந்த படத்தை தெலுங்கு நேட்டிவிட்டிக்கு ஏற்றபடி சரியாகப் படமாக்கியிருக்கிறார்கள் என ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். வெங்கடேஷ் இதுவரை நடித்த படங்களிலும், ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலும் இதுதான் சிறந்தது என்று சொல்கிறார்கள்.
அதே சமயம் பிளாஷ்பேக் காட்சிகள் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கின்றன. நிஜத்தில் 60 வயதான விஜய் 20 வயதான அம்மு அபிராமியுடன் ஜோடி சேர்ந்து நடித்ததும், அந்த பிளாஷ் பேக் காட்சிகள் கதையோட்டத்தைத் தடுப்பதாக உள்ளதாகவும் படத்தின் மைனஸ் பாயின்ட்டுகளாகக் குறிப்பிடுகிறார்கள்.
இருந்தாலும், 'நரப்பா' படம் ரீமேக்காக இருந்தாலும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளதாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.