கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யாவின் 47வது பிறந்தநாள் வரும் ஜுலை 23ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அவர் நடித்து வரும் 40வது படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கி வரும் அப்படத்தில் சூர்யாவுடன், சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
நேற்று தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஆந்தாலஜி படமான 'நவரசா' வில் சூர்யா நடித்துள்ள 'கிட்டார் கம்பி மேலே நின்று' படத்தின் புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் வெளியானது.
சூர்யா நடித்த படம் தியேட்டர்களில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக நடித்த 'சூரரைப் போற்று' கடந்த வருடம் ஓடிடி தளத்தில் தான் வெளியானது. சூர்யாவின் அடுத்த படத்தை அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்கத்தான் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் 'வலிமை' அப்டேட்டுக்காக இரண்டு வருடங்களாக தவமிருந்த சூழ்நிலையில் சூர்யா படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படி அடுத்தடுத்து சூர்யா பற்றிய படங்களின் அப்டேட்டுகள் வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.