‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம்.
கொரோனா அலை சமயம் படப்பிடிப்பை நடத்துவது கடினமான ஒன்று. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும், அதையும் சீக்கிரம் முடிப்போம் என சமீபத்தில் 'நவரசா' பற்றிய பேட்டிகளில் மணிரத்னம் சொல்லியிருந்தார். அப்படியென்றால் தற்போது ஆரம்பமாகியுள்ளது கடைசி கட்ட படப்பிடிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையில் படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாதது 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.