இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதையில் இப்படம் தயாராகிறது. எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகியுள்ளது. கொம்பு சீவி விட்ட காளையாட்டம் மிரட்டலான எழுத்துக்களின் வடிவத்தில் வாடிவாசல் தலைப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு தலைப்புக்கு மேலே காளையின் அடையாளமும் இடம்பெற்றுள்ளது. இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறனும், பாண்டிராஜ் இயக்கும் தனது 40ஆவது படத்தில் நடித்து வரும் சூர்யாவும் வெகு விரைவிலேயே வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகவே தற்போது டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.