சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் 'பாரஸ்ட் கம்ப்'. டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி வெற்றி பெற்றது . இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 'லால் சிங் சட்டா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பை சமீபத்தில் லடாக்கில் நடத்தினர். படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பியதும் அந்த பகுதியில் குப்பைகளை படக்குழுவினர் அப்படியே போட்டு விட்டு சென்றதாக சர்ச்சை கிளம்பியது.
படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கிடந்ததை ஒருவர் வீடியோவில் படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்து “லடாக்கின் வாகா கிராமத்தினருக்கு அமீர்கான் படக்குழுவினர் விட்டு சென்ற பரிசு இது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றி அமீர்கான் அதிகம் பேசுவார். அவரது படப்பிடிப்பு தளம் அசுத்தமாக உள்ளது'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அமீர்கானை பலர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதையடுத்து அமீர்கான் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய படப்பிடிப்பு தளம் சுத்தமாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. படப்பிடிப்பு தளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள தனிக்குழுவையே வைத்துள்ளோம். நாங்கள் எப்போதுமே படப்பிடிப்பை முடித்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு தான் செல்கிறோம்'' என்று கூறியுள்ளது.