டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் தயாரிக்கும் 5வது படத்தில் சசிகுமார் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பிக்பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைள் தேர்வும் இன்னும் முடியவில்லை. டி.இமான் இசை அமைக்கிறார். புதுமுகம் ஹேம்ந்த் குமார் இயக்குகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.
கிராம பின்னணி கொண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சசிகுமார் தற்போது ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன் பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து முடித்துள்ளார். அவைகள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.