விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

சொந்த பட புரமோசனுக்கு கூட வராத நடிகர்கள் இருக்கும் காலத்தில் ஒரு உதவி இயக்குனர் படத்திற்கான புரமோசன் பணிகளை செய்திருக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார். விஜய் மில்டனின் உதவியாளர் ராஜமோகன் இயக்கி வரும் படம் அட்ரஸ். இதில் அதர்வா, பூஜா ஜவேரி, இசக்கி பரத், தியா, தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் தற்போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் ராஜமோகன்.
அவரது அட்ரஸ் படத்தின் டீசரை பார்த்து பாராட்டிய அவர் அதனை கேட்டு வாங்கி, படம் பற்றி தான் பேசி, அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரு தமிழ் துணை இயக்குனருக்கு கன்னட நடிகர் இந்த அளவிற்கு இறங்கி வந்து புரமோசன் செய்து கொடுத்தது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ராஜமோகன் கூறியதாவது: மொழி வாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கி கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதை தான். அட்ரஸ் படத்தின் டீஸரை பார்த்துவிட்ட சிவராஜ் குமார் பாராட்டினார். டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். என்றார்.




