மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஹீரோ, வில்லன் என மாறுபட்ட கோணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் விஜய் சேதுபதி. அதோடு தற்போது அவர் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது : என்னைப் பொறுத்தவரை திரைப்படங்கள், வெப்சீரிஸ் இரண்டையுமே ஒரே மாதிரியாகத் தான் நினைக்கிறேன். ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்றார்.
ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது இலக்கு எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு ‛‛எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன். நான் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.