'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பெனா படத்தில் நடித்த கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு லூசிபர், திரிஷ்யம்-2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக அறிவித்த பிறகு, ஏற்கனவே பேசியபடி தங்களது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கிய பிறகுதான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று லிங்குசாமிக்கு எதிரான ஒரு நடவடிக்கையை எடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. ஆனால் அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.