ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, ஆண்டுதோறும் கோவாவில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடையும். ஆனால் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 52வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
52வது சர்வதேச திரைப்பட விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த விழாவில் பிரபல இயக்குனர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.