Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல : சூர்யாவிற்கு காயத்ரி பதிலடி

03 ஜூலை, 2021 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Cinematograph-amendment-bill---Gayathiri-reply-to-Suriya

மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக படங்கள் வெளிவந்த பிறகும் அதன் மீதான புகார்கள் வந்தால் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவது. இதற்கு சினிமாவில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா டுவிட்டரில், ‛‛சட்டம் மக்களை காக்க வேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது'' என பதிவிட்டிருந்தார்.

இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் : ‛‛சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை. ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க, அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, நீங்கள் மோடிஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலாக்கிற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள். இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது'' என பதிவிட்டுள்ளார்.

இதேப்போன்று கார்த்திக் சுப்பராஜூம் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதற்கு, ‛‛எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும், 4, சென்டிமென்ட் காட்சிகளும், 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்?'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
தேவிஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக துடிக்கும் நடிகைதேவிஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக ... ஓ.டி.டி. தளங்களுக்கு ரகுல் பிரீத் சிங் ஆதரவு ஓ.டி.டி. தளங்களுக்கு ரகுல் பிரீத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
09 ஜூலை, 2021 - 12:56 Report Abuse
Sridhar இவங்க என்ன கொள்கை குறிக்கோள் என ஏதாவது வைத்துக்கொண்டா பேசுகிறார்கள்? செஞ்ச பிராடுகளுக்கு நாளைக்கு CBI / ED லெந்து ரைட் வரும்போது, "நான் அரசுக்கு எதிராக பேசியதால் அவர்கள் பழிவாங்குகிறார்கள்" அப்படீன்னு ஓலம் போடறதுக்கு எதுவா இருக்குமே, அதுக்குதான். ஆனால், அப்படியே பழி கிழினு பேசினாலும், சட்டம் தன கடமையை செய்யத்தானே செய்யும்? செட்டல் பண்ணணும்னாலும் அப்போ அதிக ரேட் ஆகலாம். மாநில அரசு ஒரு ஆணியையும் புடுங்கமுடியாது. விஷயம் தெரியாம ஒளறிக்கிட்டு இருக்கானுங்க. பாவம்.
Rate this:
Subramaniam Poopal - Bonn,ஜெர்மனி
08 ஜூலை, 2021 - 02:16 Report Abuse
Subramaniam Poopal காயத்ரி தலையிட்டால் நிச்சயம் அது நீதிக்கு புறம்பாக , உளறலாக , உண்மைக்கு மாறாகவே இருக்கும் , எனவே சூர்யா சார் நீங்கள் உங்கள் பணியை பயமின்றி தொடரலாம் .
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் COULD IT BE MEDIEVAL KNIGHT ARMOR SUITE? அரசாங்கமே இவர்தானோ?
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
05 ஜூலை, 2021 - 16:48 Report Abuse
KavikumarRam காயத்ரி செம அடி.
Rate this:
rishi - varanasi,இந்தியா
05 ஜூலை, 2021 - 00:04 Report Abuse
rishi இவன் குதிக்கிறது பாத்தா , இவனும் இவன் பொண்டாட்டியும் எதோ திட்டம் வச்சிருங்கக்காங்க போல, நெறய காசு வாங்கிகிட்டு இந்து மதத்தை தவறாக சித்தரிக்க திட்டம் வச்சிருக்காங்க போல..
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in