‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக முன்னணி இடத்தில் இருந்தபோதும், ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தில் களமிறங்கி கடந்த சில வருடங்களாக நடிப்பிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இவர்களைப் போலவே இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அதற்கேற்றார்போல், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார், தேவிஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தி படம் இயக்கப்போவதாக கூறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை சார்மி கவுர். சிம்புவுக்கு ஜோடியாக 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சார்மி, அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் என்கிற படத்தை தயாரித்து வரும் சார்மி, விரைவில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படத்தை துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.