ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் அந்த படத்தை மத்திய அரசு பார்க்கும். பிறகு மீண்டும் சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கும். இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என திரைத்துறையினர் பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா நேற்று இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். சட்டம் மக்களை காக்க வேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது என பதிவிட்டிருந்தார்.
அதேபோல், அவரது தம்பியும் நடிகருமான கார்த்தியும் இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக மத்திய அரசின் கைகளுக்கு செல்வது வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும்.
அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும். அதே நேரத்தில் பைரசியை தடுக்க இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையைநசுக்கும் விதமாக உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
விஷால், டைரக்டர் அமீர் உள்ளிட்டோரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். விஷால் வெளியிட்டுள்ள பதிவில் 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? ஏன் தணிக்கை வாரியம் உள்ளது? இப்படி ஒரு பரபரப்பான மாற்றங்கள் ஏன்? சினிமா துறையை எப்போதும் ஏன் குறிவைக்க வேண்டும்? முதல் ஜிஎஸ்டி, பின்னர் பைரசி, இப்போது இந்த சட்டம்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை.'. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.