ஏப்., 30க்கு தள்ளிப்போனது ‛பெத்தி' | படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ரஜினிகாந்த்: ஏன் தெரியுமா? | பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது? | 'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி? | தர்பார் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 விலும் இடம்பெற்ற ஜதின் ஷர்மா | வழக்கமான ராணுவ படம் அல்ல : மோகன்லால் 367வது பட இயக்குனர் தகவல் | தம்பியின் திருமணத்திற்கு முந்திய போட்டோஷூட்டில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன்! | 'வாரணாசி' படம் புராணம், தெய்வீகம் கலந்த கலவையாக இருக்கும்! -இயக்குனர் ராஜமவுலி தகவல் | சரத்குமார் நடிக்கும் 'ஆழி' படம் பிப்ரவரி 27ல் ரிலீஸ்! | ராஜமவுலியிடம் பிரியங்கா சோப்ரா வைத்த முக்கியமான கோரிக்கை |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது. அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்ற போது படக்குழுவினர் சிலருக்கு கொரானோ தொற்று பரவியது. இருந்தாலும், அதையும் மீறி படப்பிடிப்பை நடத்தினர். ஆனால், இந்தியாவில் பரவல் உயர்ந்த போது படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்பினர்.
இரண்டாவது அலை தாக்கத்தால் கடந்த இரண்டு மாத காலமாக படப்பிடிப்பை நடத்தாமல் இருந்தனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முதலிரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.
இன்று ஜுலை 1ம் தேதி படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் சென்னை வந்துள்ளார். கடந்த வாரத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்புக்காக நடனப் பயிற்சியையும் மேற்கொண்டார் பூஜா. தற்போது படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்புதான் நடைபெறும் எனத் தெரிகிறது.